இலக்கை எட்ட முடியவில்லை, மேலதிகாரிகள் பிரஷர்: தூக்கில் தொங்கிய சுகாதாரத்துறை அதிகாரி!

சுகாதாரத்துறை கொடுத்த இலக்கை எட்ட முடியாததால் சுகாதாரத்துறை மேலதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாகவும் இதனால் சுகாதாரத் துறையின் தலைமை சுகாதார அதிகாரி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பெங்களூரை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி நாகேந்திரா. இவர் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தலைமை சுகாதார அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை கொடுத்த இலக்கை இவர் முழுமையாக எட்டவில்லை என அவரது மேலதிகாரிகள் அவருக்கு
 

இலக்கை எட்ட முடியவில்லை, மேலதிகாரிகள் பிரஷர்: தூக்கில் தொங்கிய சுகாதாரத்துறை அதிகாரி!

சுகாதாரத்துறை கொடுத்த இலக்கை எட்ட முடியாததால் சுகாதாரத்துறை மேலதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாகவும் இதனால் சுகாதாரத் துறையின் தலைமை சுகாதார அதிகாரி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூரை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி நாகேந்திரா. இவர் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தலைமை சுகாதார அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சுகாதாரத்துறை கொடுத்த இலக்கை இவர் முழுமையாக எட்டவில்லை என அவரது மேலதிகாரிகள் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது

ஆரம்ப காலத்திலிருந்தே விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய இவர் இலக்கை எட்ட முடியாததால் ஏற்பட்ட நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சுகாதாரத் துறையில் தீவிரமாக பணி செய்து கொண்ட மன அழுத்தம் காரணமாக திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூரில் தற்கொலை செய்துகொண்ட சுகாதாரத்துறை அதிகாரியின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்படும் என்றும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்

மேலதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

From around the web