தலைநகரில் தலைவிரித்தாடும் கொரோனா! மக்கள் மிகவும் அச்சம்!

தமிழகத்தில் இரண்டாவது நாளாக சென்னையில் கொரோனா தொற்று ஆனது 600ஐதாண்டியது!
 
தலைநகரில் தலைவிரித்தாடும் கொரோனா! மக்கள் மிகவும் அச்சம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. இதன் மத்தியில் சில நாள்களாக கொரோனா என்னும் ஆட்கொல்லி நோய் மிகவும் வேகமாக பரவிக் கொண்டு வருகிறது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்திலும் கவலையில் உள்ளனர். மேலும் தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னையில் இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 600 தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 664 பேருக்கு கொரோனா உறுதி ஆனது .

corona

அதற்கு முந்தைய தினத்தில் 633 பேருக்கு உறுதியாய் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கொரோனா  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 153 பேருக்கும் தஞ்சை மாவட்டத்தில் 108 பேருக்கும் கொரோனா உறுதியானது.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் 80 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 63 பேருக்கும் சேலம் மாவட்டத்தில் 45 பேருக்கும் திருச்சியில்  34 பேருக்கும் மதுரையில் 43 பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா 19 பேருக்கும் திண்டுக்கல்லில் 21 பேருக்கும் வேலூரில் 25 பேருக்கும் நாமக்கலில் 16 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கொரோனாவானது அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் நிலவுகிறது.

From around the web