சிறுமி ஹாசினி கொலைவழக்கு- குற்றவாளிக்கு தூக்கு

கடந்த ஆண்டு பிப்ரவர்-7ம் தேதி சென்னை போருரை அடுத்த மந்தம்பாக்கத்தில் வசித்து வந்த பாபு என்பவரின் மகள் ஹாசினி. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணயில் அந்த பகுதியிலேயே வசித்துவந்த தஷ்வந்த் என்ற இளைஞர் சிறுமியை கடத்தி சென்று கொலைசெய்து எரித்துவிட்டார் என தெரியவந்தது. இதனையடுத்து நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 14ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்
 
தஷ்வந்த்

கடந்த ஆண்டு பிப்ரவர்-7ம் தேதி சென்னை போருரை அடுத்த மந்தம்பாக்கத்தில் வசித்து வந்த பாபு என்பவரின் மகள்  ஹாசினி. வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணயில் அந்த பகுதியிலேயே வசித்துவந்த தஷ்வந்த் என்ற இளைஞர் சிறுமியை கடத்தி சென்று கொலைசெய்து எரித்துவிட்டார் என தெரியவந்தது.

இதனையடுத்து நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை கடந்த பிப்ரவரி 14ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இன்று(19.02.2018) தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு விவரம்: பின்வரும் பிரிவுகளான

1. 363 – கடத்தல்

2. 366 -தூக்கிச்செல்லுதல்

3. 354 B -பெண்களைப் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் ஆடையைக் களைதல்

4. 302 -கொலை

5. 201 -தடயங்களை மறைத்தல்-  ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வண்டது. மேலும், போஸ்கோ சட்டத்தின் 6, 7,8 பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

விசாரணை முடிந்த பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளின் கீழும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக 46 ஆண்டுகள் காவல் தண்டனையும் மேலும் 302வது பிரிவின் கீழ் மரண தண்டனையும் அளித்தார்.

From around the web