அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் மக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!

பெங்காலி  நேபாளி தமிழ் மற்றும் தாய் போன்ற மக்களுக்கு வாழ்த்துக் கூறினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் மக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!

தமிழகத்தில் இன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழகத்தில் வருஷம் சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தப் புத்தாண்டில் தமிழக மக்கள் அனைவரும் காலையில் எழுந்து புத்தாடை அணிந்து கோவிலுக்கு சென்று தமிழ் புத்தாண்டை கொண்டாடுவார்கள். மேலும் இந்த தமிழ் புத்தாண்டிற்கு உலகில் உள்ள பல தலைவர்களும் பல கட்சித் தலைவர்களும் காலை முதலே வாழ்த்து கூறி வருகின்றனர்.

new year

அதன்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் எழுத்துக்களால் பதிவிட்டு வாழ்த்துக் கூறினார். மேலும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறினார். இதை தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா அதிபரும் தற்போது தமிழர்களுக்கு வாழ்த்து கூறியதாக தகவல் வெளியானது.

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் தமிழ் புத்தாண்டு, பல நாடுகளில் கொண்டாடப்படும் புத்தாண்டு  வாழ்த்து கூறியுள்ளார். மேலும் அதன்படி தமிழ், பெங்காலி, நேபாளி, மியான்மரில், தாய், கம்போடியா போன்ற பகுதிகளில் கொண்டாடப்படும் புத்தாண்டு இருக்கும் அவர் மற்றும் அவரது மனைவியுடன் சேர்ந்து வாழ்த்து கூறிய தாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web