ஹத்ராஸ் விவகாரம்: ராகுல்காந்திக்கு கிடைத்த வெற்றி!

 

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் சென்ற கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தெரிவித்து திமுக காங்கிரஸ் உள்பட பல எதிர்க்கட்சிகள் உத்தரபிரதேச முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரதமர் மோடி ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர் 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமமான ஹாத்ராஸ் கிராமத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அவருடைய சகோதரி பிரியங்கா காந்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் இன்று மீண்டும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி அதே கிராமத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வந்தன, சற்று முன் வெளியான தகவலின்படி ஹாத்ராஸ் செல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்திரப்பிரதேச போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ராகுல் காந்தி, பிரியங்கா கந்தி உள்பட 5 பேர் மட்டுமே அந்த கிராமத்திற்கு செல்ல அனுமதி என்றும் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் அனுமதி என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தொண்டர்களுக்கு அனுமதி இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது 

இரண்டாவது முறையாக ஹாத்ராஸ் செல்லும் முயற்சிக்கு ராகுல் காந்திக்கு வெற்றி கிடைத்துள்ளது ஆனால் அதே நேரத்தில் நாட்டிலுள்ள மற்ற இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் போது இதே போல் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பொங்குவாரக்ளா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது  

From around the web