டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு: அதிர்ச்சி தகவல்

கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தை நடத்தி வரும் மாணவர்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தி வருவதும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதும் நடந்து வருகிறது இந்த நிலையில் நேற்று நள்ளிரவு டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் கேட் அருகே நின்று 2 மர்ம நபர்கள் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது இதனை அடுத்து
 
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு: அதிர்ச்சி தகவல்

கடந்த சில வாரங்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த போராட்டத்தை நடத்தி வரும் மாணவர்கள் மீது மர்மமான முறையில் தாக்குதல் நடத்தி வருவதும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதும் நடந்து வருகிறது

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் கேட் அருகே நின்று 2 மர்ம நபர்கள் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது

இதனை அடுத்து அந்த மர்ம நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web