குஜராத் மாநில முதல்வர் விஜய்ரூபானி-  முதல்வர் பதவியை ராஜினாமா !!!

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்
 
vijay ruppani

தற்போது இந்தியாவில் தொடர்ச்சியாக தேர்தல் நடைபெற்று வருகிறது. மேலும் பல மாநிலங்களில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தகவல்களும் நடைபெற்றுவருகிறது. ஏனென்றால் நம் இந்தியாவின் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக மாநில முதல்வர் ராஜினாமா செய்து அதன் பின்னர் வேறொருவர் ஆட்சி செய்து வருகிறார். மேலும் தற்போது குஜராத் மாநில முதல்வரும் தனது ராஜினாமா பதவியை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.vijay ruppani

அதன்படி குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் மேலும் அவர் குஜராத் ஆளுநர் ஆசார்யா தேவ்ராத்திடம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். மேலும் பாஜகவில் சேர்ந்த அவருக்கு 65 வயதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 2016 முதல் குஜராத் மாநில முதல்வராக இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அஹமதாபாத்தில் ஆளுநர் மாளிகை சென்ற அவர் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது விஜய் ரூபானி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் இவர் ஆனந்திபென் பட்டேல் பிறகு முதல்வர் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web