நிச்சயம் செய்த மாப்பிள்ளையை தவிர்த்ததால் பெண்ணின் அம்மா கொலை

சென்னை கிண்டியில் நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கோரி பெண்ணின் தாயாரை வெட்டிக் கொன்றவனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கிண்டி நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரின் மகள் ஜீவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் வினோத் என்பவனுக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ஆனால் வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என்பதால் திருமணத்தை நிறுத்துமாறு வினோத்தின் பெற்றோரிடம் சிலர் தெரிவித்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது வினோத் தனக்கு ஜீவிதாவை திருமணம் செய்து வைக்குமாறு
 

சென்னை கிண்டியில் நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்கக் கோரி பெண்ணின் தாயாரை வெட்டிக் கொன்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.

நிச்சயம் செய்த மாப்பிள்ளையை தவிர்த்ததால் பெண்ணின் அம்மா கொலை

சென்னை கிண்டி நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரின் மகள் ஜீவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் வினோத் என்பவனுக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. ஆனால் வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என்பதால் திருமணத்தை நிறுத்துமாறு வினோத்தின் பெற்றோரிடம் சிலர் தெரிவித்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது

வினோத் தனக்கு ஜீவிதாவை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு தொடர்ந்து ஜீவிதாவின் அம்மா ரேவதியிடம் தகராறு செய்துள்ளான். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வினோத் கத்தியால் வெட்டியதில் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், தப்பி ஓடிய வினோத்தை தேடி வருகின்றனர். வினோத்தின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே பலமுறை கிண்டி போலீசில் புகார் செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ரேவதியின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

முன்பே முறையான நடவடிக்கை எடுத்திருந்தால் ரேவதியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

From around the web