கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

 
college

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் பேராசிரியர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை சற்றுமுன் தமிழக அரசின் உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது

இதன்படி ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நேரடியாக நடைபெறும் என்றும் இளங்கலை இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் இளங்கலை இறுதி ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய் வியாழன் சனி ஆகிய கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

மேலும் உயர் கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளை திறக்க அனுமதி உண்டு என்றும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விடுதிகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் வகுப்புகள் தொடங்கவில்லை என்பதால் வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது

From around the web