போடு! இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்ன சூப்பரான விஷயம்!

தமிழகத்தில் வரும் ஐந்து நாட்களுக்கு இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
 
போடு! இந்திய வானிலை ஆய்வு மையம் சொன்ன சூப்பரான விஷயம்!

கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில்  நினைவு வருவது மே மாதம் தான். ஆனால் மே மாதம் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஆனது தலைவிரித்தாடுகிறது.மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் ஆனது சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் மிகவும் அவசியம் எரிச்சலும் உள்ளனர். மேலும் கோடை காலம் தொடங்கியதும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் நீரின் பற்றாக்குறை அளவு அதிகரிக்கத் தொடங்கிவிடும். 

rain

 இதனால் மக்கள் மிகவும் அச்சத்துடன் மே மாதத்திற்கு எதிர்நோக்கியுள்ளனர். இதன் மத்தியில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆனதே சில தினங்கள் முன்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று கூறி மக்களை மேலும் மேலும் வருத்தத்தை கொடுத்தது. இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையமானது தற்போது தமிழகத்திற்கு இன்பமான தகவல் ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் வர இருக்கும் ஐந்து நாட்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .வரும் 14ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏனென்றால் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கையில் நிலவும் சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் குறிப்பாக தென் தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். கோடைகாலத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் இவ்வாறு கூறியது மக்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது.

From around the web