திறக்கப்பட்ட திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு!

 
திறக்கப்பட்ட திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன என்பது தெரிந்ததே. இதனால் ரிலீசுக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான திரைப் படங்கள் வெளியாக முடியாமல் சிக்கலில் இருந்தன. ஒரு சில திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்தாலும் பல திரைப்படங்கள் திரையரங்குகள் திறப்பதற்காக காத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து  நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இருப்பினும்  பார்வையாளர்கள் அதிகம் வராததால் ஒருசில புதிய திரைப்படங்கள் மட்டுமே திரையரங்குகளில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது

theaters

இந்தநிலையில் கொரோனா பாதிப்புக்கு பின்னர் பெங்களூரில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு பயம் காரணமாக பார்வையாளர்கள் திரையரங்கு வருவதை பெரும்பாலும் தவிர்த்தனர். அதுமட்டுமின்றி ஓடிடி பிளாட்பாரத்தில் அனைத்து திரைப்படங்களும் குறைந்த விலையில் பார்க்கும் வகையில் வசதிகள் வந்து விட்டதன் காரணமாக திரையரங்குகளுக்கு செல்வதை மக்கள் தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் திரையரங்குகள் திறக்கப்பட்டும் பார்வையாளர்கள் வராததால் பல திரையரங்குகள் பெங்களூரில் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் புதிய திரைப்படங்கள் வெளிவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அப்படியே புதிய திரைப்படங்கள் வந்தாலும் பார்வையாளர்கள் கூட்டம் வருமா? என்பதையும் பெங்களூரில் நிலைமை தமிழகத்துக்கு வருமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

From around the web