புதுசா "லைசன்ஸ்" எடுக்க போறவங்களுக்கு சூப்பரான அறிவிப்பு!!!

அலுவலங்களில் தனியாக  ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை
 
licence

முன்னொரு காலத்தில் நாம் வெளி ஊருக்கு செல்வதற்கு கூட நடந்து சென்று கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அருகில் செல்லும் அளவிற்கு நாம் வாகனங்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். மேலும் தற்போது தரையை விட்டு வானத்தில் பயணம் செய்யும் அளவிற்கு அறிவியலின் கண்டுபிடிப்பானது அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவை மனிதனுக்கு பல்வேறு சாதகமான ஒன்றாகவே இருந்தாலும் பல பகுதிகளில் மனிதனை  அழிவிற்கு கொண்டு செல்கிறான்.driving school

மேலும் பல பகுதிகளில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வது சகஜமான நிலைமையில் காணப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் அவ்வப்போது காவல்துறையினரால் கண்டிப்பான நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி பல காவல்துறையினர் அன்பான முறையில் அறிவுறுத்தல் வருகின்றனர்.  தற்போது ஊரடங்கு காலகட்டம் என்பதால் மத்திய அரசானது இந்த லைசென்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஓட்டுநர் உரிமம் குறித்து சில இன்பமான தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஓட்டுநர் உரிமம் பெற புதிய முறை ஜூலை 1ஆம் தேதி முதல் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அது என்னவென்றால் அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பயிற்சி முடித்து சான்று பெற்றிருந்தால் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் அவர்கள் ஆர்டிஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனைகளில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் இந்த ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய நடைமுறை வருகின்ற ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

From around the web