படிப்படியாக அதிகரிக்கும் பலி! ஒரே நாளில் 780 பேர் உயிரிழப்பு!

இந்திய நாட்டில் ஒரே நாளில் கொரோனா தாகத்திற்காக 780 பேர்  உயிரிழந்ததாக தகவல்!
 
படிப்படியாக அதிகரிக்கும் பலி! ஒரே நாளில் 780 பேர் உயிரிழப்பு!

மக்கள் மத்தியில் உயிர்கொல்லி நோய் என்றால் அனைவருக்கும் முதல் நினைவு கொரோனா வைரஸ் தான். கொரோனா முதலில் அண்டை நாடான சைனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகின் பல நாடுகளுக்கும் கொரோனா பரவியது. எந்த நாடும் கடைப்பிடிக்காத வழியாக முழு .ஊரடங்கு திட்டத்தை இந்தியா நாடு முழுவதும் அமல்படுத்தியது.ஆனால் கடந்த சில வாரங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து  மாநிலங்களிலும் கொரோனா தற்போது அதிகரித்துள்ளது. மேலும் குறிப்பாக தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கமானது தலைவிரித்தாடுகிறது.

lockdown

தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.தற்போது மத்திய சுகாதாரத்துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடெங்கும் ஒரே நாளில் கொரோனா தாக்கத்தினால் 780 பேர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பினால் இதுவரை 1 லட்சத்து 67 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. மேலும் நாட்டில் நோயிலிருந்து குணமடைந்து எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோயின் தாக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும் வேதனையான உண்மையாகும். மேலும் பல மாநிலங்களில் பல்வேறு விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

From around the web