மேயர், எம்எல்ஏ, துணை முதல்வர் என படிப்படியாக வளர்ந்தவன் நான் ஸ்டாலின்!

கன்னியாகுமரி தக்கலை பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறார் மு க ஸ்டாலின்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் பல கட்சிகளும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. ஆளும் கட்சி அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக  பாஜக கட்சியை வைத்துள்ளது. இதற்கு வலுவாக தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள திமுகவுடன் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

dmk

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக தங்களது வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கையிலும் வெளிப்பட்டது. அதன்படி நேற்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி என்பதால் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் பல கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி எதிர்க்கட்சித் தலைவர் என்று அழைக்கப்படும் முக ஸ்டாலின் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அப்பொழுது அவர் கூறினார், நான் மேயர், எம்எல்ஏ, துணை முதல்வர் என படிப்படியாக வளர்ந்தவர் என்று கூறினார். மேலும் அதிமுக அரசு 10 ஆண்டு காலத்தில் என்ன செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் மக்களவை இடைத் தேர்தலில் வேட்பாளராக இருக்கும் விஜய் வசந்துக்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அண்ணா சிலை முன்பு திமுக தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரை.  மேலும் திமுக வேட்பாளர்கள் மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜன் ஆகியோர்க்கு ஆதரவாகவும் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை அமைத்த கலைஞரின் மகன் வந்திருக்கிறேன் எனவும் அவர் கூறினார்.

From around the web