அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே இனி அரசாங்க வேலை: அதிரடி திட்டம் தயார்

தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைப்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஒரு பெருமையாக கருதுகின்றனர். அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அதே நேரத்தில் படித்து முடித்தவுடன் அரசு வேலை மட்டும் வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ அவர்கள் இனிமேல் அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு வேலை
 

அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே இனி அரசாங்க வேலை: அதிரடி திட்டம் தயார்

தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து படிக்க வைப்பதை ஒவ்வொரு பெற்றோரும் ஒரு பெருமையாக கருதுகின்றனர். அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் படித்து முடித்தவுடன் அரசு வேலை மட்டும் வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ அவர்கள் இனிமேல் அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்ற சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை தர வேண்டும் என்பதே என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு. தனியார் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு மக்கள் முயல்வதில் எந்தவித நியாயமும் இல்லை. அரசு வேலை வேண்டுமென நினைத்தால் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்.

இருப்பினும் பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே இந்தத் திட்டத்தைச் சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் படித்து வரும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை மாதந்தோறும் அரசு செலவழித்து வருகிறது.

ஆனாலும் சாரைசாரையாகத் தனியார் பள்ளிகளை நோக்கியே மக்கள் படையெடுக்கிறார்கள். இந்த நிலையை மாற்றி அதிக எண்ணிக்கையிலான பெற்றோர், தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் விதமாக அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.” இவ்வாறு அமைச்சர் ஜகர்நாத் மதோ தெரிவித்தார்

From around the web