வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: பான்கார்டு-ஆதார் கார்டு இணைக்கவும் அவகாசம்

2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்ககை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடுவை, 2020ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது என்பது தெரிந்ததே இதேபோல, ஆதார் அட்டையை, பான் நம்பருடன் இணைப்பதற்கான கால வரம்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்க அடுத்த ஆண்டு அதாவது
 
சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான வரி விலக்கில் இதுவும் இடம் பெறலாம்..

வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: பான்கார்டு-ஆதார் கார்டு இணைக்கவும் அவகாசம்

2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்ககை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இந்த ஆண்டு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடுவை, 2020ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது என்பது தெரிந்ததே

இதேபோல, ஆதார் அட்டையை, பான் நம்பருடன் இணைப்பதற்கான கால வரம்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்க அடுத்த ஆண்டு அதாவது 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சிறு மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வரி செலுத்துவோரின் 1 லட்சம் வரை சுய மதிப்பீட்டு வரி செலுத்தும் தேதியும் 2020 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம், 1961 (ஐடி சட்டம்)ல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் சுய மதிப்பீட்டு வரி முழுவதுமாக செலுத்தப்படலாம். தாமதமாக பணம் செலுத்துவது ஐடி சட்டத்தின் பிரிவு 234 ஏ இன் கீழ் வட்டி கட்ட வேண்டிய சூழலை ஏற்படுத்தும்.

இவ்வாறு வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web