எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு!

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது, இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமான திட்டங்களை அறிவிக்கவில்லை என்ற கருத்தை மிக வலுவாக வலியுறுத்துகிறது. நிறைய பொருட்களின் விலை அதிகமாகி உள்ளது, இது நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுகுறித்து பட்ஜெட்டில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காற்று மாசுபாடு தவிர்க்கும் வண்ணம் எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரிக் வாகனத்
 

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது, இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமான திட்டங்களை அறிவிக்கவில்லை என்ற கருத்தை மிக வலுவாக வலியுறுத்துகிறது. நிறைய பொருட்களின் விலை அதிகமாகி உள்ளது, இது நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுகுறித்து பட்ஜெட்டில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காற்று மாசுபாடு தவிர்க்கும் வண்ணம் எலக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கிய மத்திய அரசு!


எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பிற்கு பிரத்யேக ஆலைகள் இந்தியாவில் அமைக்கப்பட உள்ளது. ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பு ஊக்கப்படுத்தப்படும். 

வங்கிக் கடன்கள் மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு, ரூ.1.5 லட்சம் வரை வட்டி சலுகை அளிக்கப்படும். எலக்ட்ரிக் வாகனங்களை விரைவாக அமல்படுத்த மோடி அரசு முனைப்பு காட்டி வருகிறது. 

இதற்காக மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி கொண்டிருக்கிறது என்றார். மேலும் பேசிய அவர், பல்வேறு வகையான போக்குவரத்தில் பயன்படுத்தும் வண்ணம் ஒரே தேசிய பயண அட்டை வழங்கப்படும். 

இது கடந்த மார்ச் 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் புழக்கத்திற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார். 

From around the web