ஆளுனர் பதவியில் விருப்பமில்லை, முதல்வராக தயார்: பாஜகவில் இணையவுள்ள பிரபலம் பேட்டி!

 

ஆளுநர் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்றும் முதலமைச்சர் பதவி கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயார் என்றும் விரைவில் பாஜகவில் இணைய உள்ள பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்தவர் ஸ்ரீதரன். இவர் டெல்லி கொச்சி மெட்ரோ திட்டங்களின் தலைவராக பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது 

metro man

இந்த நிலையில் 88 வயதாகும் ஸ்ரீதரன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தனது அரசியல் பிரவேசம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த மெட்ரோ நான் ஸ்ரீதரன், கேரளாவில் பாஜக நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் ஏராளமானோர் பாஜகவை நோக்கி சாரை சாரையாக படை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார் 

பாஜகவில் இணைந்த பிறகு தனக்கு ஆளுநர் பதவி கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை என்றும் ஆளுநர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் பதவியை வகிக்க தயார் என்றும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்


 

From around the web