தனது பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கும் அரசு போக்குவரத்து கண்டக்டர்!!

அரசு போக்குவரத்து கண்டக்டர் தனது பேருந்தில் ஏறுவோருக்கு இலவச முகக் கவசங்களை வழங்கி, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வரும் கருப்பசாமி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒரு ரோல் மாடலாக விளங்கி வருகிறார். அதாவது மக்களின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு பலவித கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 50 சதவீதப் பேருந்துகள் 60% பயணிகளுடன் இயங்கி வருகின்றது. அந்தவகையில்
 
தனது பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கும் அரசு போக்குவரத்து கண்டக்டர்!!

அரசு போக்குவரத்து கண்டக்டர் தனது பேருந்தில் ஏறுவோருக்கு இலவச முகக் கவசங்களை வழங்கி, பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார். தேனி மாவட்டத்தில் உள்ள போடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வரும் கருப்பசாமி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் ஒரு ரோல் மாடலாக விளங்கி வருகிறார்.

அதாவது மக்களின் பொருளாதார நிலையினைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு பலவித கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 50 சதவீதப் பேருந்துகள் 60% பயணிகளுடன் இயங்கி வருகின்றது.

தனது பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கும் அரசு போக்குவரத்து கண்டக்டர்!!

அந்தவகையில் போடி அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர் கருப்பசாமி அதே வழித் தடத்தில் இயங்கும் பேருந்தில் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். ஒருநாளில் எத்தனை பேர் பயணம் செய்தாலும், அத்தனை பேருக்கும் முகக்கவசம் வழங்கிவருகிறார். அதற்காக தனது சம்பளத்தில் ரூ.27 ஆயிரம் செலவு செய்து, 2000 முகக்கவசங்கள் வாங்கி வைத்துள்ளார்.

தினமும் பணிக்கு வரும்போது 200 முகக் கவசங்களை எடுத்து வந்து பேருந்தில் பயணிப்போருக்கு வழங்கி வருகிறார். தனது சொந்த செலவில் மக்களின் நலனுக்காக சேவையாற்றும் கருப்பசாமியின் செயல் பெரும் பாராட்டினைப் பெற்று வருகிறது.

From around the web