டிசம்பர் வரை சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியர்கள் இயங்கி வந்தது என்பதும், திங்கள் முதல் சனி வரை அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தது என்பதும் தெரிந்ததே

 

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் கடந்த சில வாரங்களாக 50 சதவீத ஊழியர்கள் இயங்கி வந்தது என்பதும், திங்கள் முதல் சனி வரை அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தது என்பதும் தெரிந்ததே

ஆனால் செப்டம்பர் 1 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலர்கள் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து செப்டம்பர் 1 முதல் 100 சதவீத ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கி வருகிறது 

இருப்பினும் சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகம் இயங்கி வருவதை அடுத்து சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு கடந்த சில மாதங்களாக அரசு அலுவலங்களுக்கு அதிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அதனைக் கணக்கில் கொண்டு வரும் டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்துள்ளது 

இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இன்னும் நான்கு மாதங்களுக்கு அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web