புதிது புதிதாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு!அதிரும் உயர்நீதிமன்றம்!

உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் புதிதாக விளக்கம் அளித்துள்ளார்!
 
புதிது புதிதாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு!அதிரும் உயர்நீதிமன்றம்!

தற்போது நாடெங்கும் பரவிக் காணப்படும் கொரோனா எதிராக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் கொரோனா நோய்க்கு மட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிசன்காகவும் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில்  ஆக்சிசன் உற்பத்தி அதிகரிப்பதற்காக இன்று காலை முதலே பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் குறிப்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழியும் பாஜகவின் சார்பில் முருகனும் கலந்துகொண்டிருந்தனர்.oxygen

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்துள்ளார். மேலும் அவர் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாத காலத்திற்கு  அனுமதித்துள்ளார்.மேலும் ஆக்சிசன் அதிகம் உற்பத்தி செய்வதற்கு தேவையான மின்சாரத்தை தமிழக மின்வாரிய துறை சார்பில் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி ஆகும் ஆக்சிசன்யும் மருத்துவப் பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன் தமிழக அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் புதிய விளக்கம் அளித்துள்ளார். அதன்படி காலை 35 மெட்ரிக் டன் அளவு மட்டுமே மருத்துவ பயன்பாட்டுக்கு உதவும் என விஜய் நாராயணன் கூறியிருந்தார். தற்போது தமிழகம் சார்பில் புதிது புதிதாக விளக்கம் அளித்து வருவது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உருவாகியுள்ளது.

From around the web