அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

கொரோனா சிகிச்சை குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு அறிவித்துள்ளது!
 
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு!

மக்கள் மத்தியில் கண்ணுக்கே தெரியாமல் பெரிய ஏற்படுத்துகின்ற நோயாக தற்போது எங்கும் வளர்ந்து வருகிறது கொரோனா நோய். இந்த கொரோனா முதன் முதலில் நட்பு நாடான சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் உலகமெங்கும் கொரோனா பரவத் தொடங்கியது.மேலும் கடந்த ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் பெரும் முயற்சியினால் இந்நோயானது கட்டுப்பாட்டிற்குள் வந்தது. சில தினங்களாக மீண்டும் இந்தியா முழுவதும் கொரோனா நோயானது தலைவிரித்தாடுகிறது.

hospital

குறிப்பாக டெல்லி ராஜஸ்தான் உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருவது கண்முன்னே தெரிகிறது. தமிழகத்திலும் சில தினங்களாக கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் சார்பில் சில தினங்கள் முன்பாக கட்டுப்பாட்டு விதிகள் தடைகள் போன்றவைகள் பிறப்பிக்கப்பட்டன. எனினும் இன்றைய தினம் முதல் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என அதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது தமிழக அரசு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ளது .அதன்படி அரசு மருத்துவமனைகளில் கொரோனா இல்லாத மற்ற சிகிச்சை மேற்கொள்வதே குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இதுபோன்று பல்வேறு உத்தரவுகளை தமிழக அரசு அதிரடியாக அறிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

From around the web