இந்திய வம்சாவளியினருக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்த இங்கிலாந்து அரசு!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் நாராயண மூர்த்தி. இவருடைய மருமகன ரிஷி சுனாக் உட்பட 3 இந்திய வம்சாவளிகளுக்கு இங்கிலாந்து அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எம்.பி.,க்களின் ஆதரவு பெற முடியாததால், இங்கிலாந்தில் பிரதமராக இருந்த தெரசா மே அண்மையில் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் போரிஸ் இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது. போரிஸ் தலைமையிலான அமைச்சரவையில் ரிஷி சுனாக்,
 

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் நாராயண மூர்த்தி. இவருடைய மருமகன ரிஷி சுனாக் உட்பட 3 இந்திய வம்சாவளிகளுக்கு இங்கிலாந்து அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. 

பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு எம்.பி.,க்களின் ஆதரவு பெற முடியாததால், இங்கிலாந்தில் பிரதமராக இருந்த தெரசா மே அண்மையில் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் போரிஸ் இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றார். 

இதையடுத்து புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது. போரிஸ் தலைமையிலான அமைச்சரவையில் ரிஷி சுனாக், அலோக் ஷர்மா, ப்ரீத்தி பட்டேல் ஆகிய 3 இந்திய வம்சாவளிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இந்திய வம்சாவளியினருக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்த இங்கிலாந்து அரசு!


இதில் ரிஷி சுனாக் என்பவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனரான நாராயணசாமியின் மருமகன் ஆவார். இவருடைய தந்தை தேசிய ஆரோக்கிய சேவை மையத்தில் பணியாற்றியவர்.


இதே போல், குஜராத்தைச் சேர்ந்த ப்ரீத்தி படேல் என்பவருக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தெரசா மே பிரதமராக இருக்கும் போது, அவருடைய அமைச்சரவையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனையடுத்து அலோக் ஷர்மாவுக்கு வெளிவிவகாரத்துறையில் அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆக்ராவைச் சேர்ந்தவர். 10 வருடங்கள் வங்கியில் பணியாற்றியவர். கடந்த 2010ம் ஆண்டு முதல் எம்பியாக இருந்து வருகிறார். 

From around the web