அதிகாலை முதல் இரவு வரை அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் ஊரடங்கு போது காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
அதிகாலை முதல் இரவு வரை அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கம்!

மக்கள் மத்தியில் கண்ணுக்கு தெரியாமல்  உள்ளது கொரோனா.கொரோனா முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகில் கொரோனா பரவியது. மேலும் கடந்த ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. ஆனால் இந்தியாவில் கடந்தாண்டில் இறுதிக்குள் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்நிலையில் பல்வேறு மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன்படி தமிழக அரசின் சார்பில் சில தினங்களுக்கு முன்பாக சில கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளன.

bus

இதற்காக முன்னேற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக  போக்குவரத்து துறை சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில்  ஊரடங்கு போது அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது. மேலும் சென்னை-குறுகிய மற்றும்  தொலைதூர ஊர்கள், ஊர்கள் தொடங்கி சென்னை வர 4 மணி முதல் இரவு 8 மணி வரை அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இரு பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள்தங்களின் பயணத்தை தேதியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்துத் துறை சார்பில் கூறப்படுகிறது.

மேலும் மாற்று பயண தேதிக்கு பதில் பேருந்து முன்பதிவு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  போது எந்த பேருந்துகளும் இயங்க படாது என்றும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் கூறியுள்ளது. சென்னையில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையிலும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

From around the web