வேலை பார்க்க மாட்டோம்!! அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் புறக்கணிப்பு!!!

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்!
 
strike

தற்போது காணப்படுகின்ற வைரஸ் கிருமிக்கு எதிராக பலரும் மிகவும் பாதுகாப்போடு போராடுகின்றனர். மனிதர்களுக்கு இந்த நோய்த்தொற்று அப்போது கண்டறியப்படுகிறது. அவர்களுக்கும் தங்கள் உயிரினை பெரிதாக எண்ணாமல் மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் முன்கள பணியாளர்களும் தினம்தோறும் இந்த கொரோனா நோய்க்கு எதிராக போராடி வருகின்றனர். மேலும் காவலர்களும் மக்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.nurse

இந்நிலையில் இத்தகைய மருத்துவர்கள் செவிலியர்கள் போன்றோர் அவ்வப்போது பல மருத்துவமனைகளில் தாக்கப்படுவது வேதனை அளிக்கிறது. அவர்களால் கொரோனா நோயை கட்டுப்படுத்தவும் நோயிலிருந்து காப்பாற்றும் மட்டும்தான் முடியும் உயிர் இழப்பை தடுப்பது என்பது அவர்களால் கூடாத காரியமே அதனையும் புரிந்துகொள்ளாமல் மக்கள் அனைவரும் உயிரிழந்தால் மருத்துவரை அடிக்கின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இச்சம்பவம் நம் தமிழகத்திலும் அரங்கேறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் அரக்கோணம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  கொரோனா 2 பேர் இறந்த நிலையில் அரசு மருத்துவமனை ஊழியர் மீது இறந்தவர்களின் உறவினர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதனை கண்டித்து ஊழியர் மீது தாக்கியதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களது பணியினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் மருத்துவர்கள் இதுபோன்று செய்வதால் நோயாளிகளும் சிகிச்சை அளிக்க ஆளில்லாமல் அதிகரிக்கவே தொடங்கும்,கொரோனா நோய் பரவல் அதிகமாக காணப்படும்.

From around the web