"திருப்பரங்குன்றத்தில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும்"-அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா!

திருப்பரங்குன்றத்தில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறினார்
 
rajan chellappa

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக சட்டப்பேரவை கூடிக்கொண்டே உள்ளது. மேலும் இதில் பல்வேறு விதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் எதிர்க்கட்சியினரும் கேள்வி கேட்கும் நேரமும் சட்டப்பேரவையில் ஒதுக்கப்படும். அந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகிறார் அதன் வரிசையில் தற்போது அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா. திருப்பரங்குன்றத்தில் அரசு கல்லூரி நிறுவ வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அங்கு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.ponmudi

அதோடு மட்டுமில்லாமல் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார், இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார். அதன்படி மதுரை மாவட்டத்தில் மொத்தம் அரசு கல்லூரி 3 உள்ளதாகவும், அரசு உதவி பெறும் கல்லூரி 17 உள்ளதாகவும், சுயநிதி கல்லூரி 21 உள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் அங்கு பொறியியல் கல்லூரி மற்றும் 12 உள்ளதாகவும் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி 17 உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் நிரப்ப வேண்டிய காலி இடங்கள் அதிகமாக உள்ளது என்றும் திருப்பரங்குன்றத்தில் அரசு கல்லூரி? -வரும் ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று அரசு கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீதம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்தார். மேலும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீத மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

From around the web