பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோபிநாத் உண்டா? நெருங்கிய நண்பரின் ஆச்சரிய தகவல்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது என்பது தெரிந்ததே சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் இதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ’நீயா நானா’ கோபிநாத் ஒரு போட்டியாளராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது இந்த நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்ட
 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கோபிநாத் உண்டா? நெருங்கிய நண்பரின் ஆச்சரிய தகவல்

பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது என்பது தெரிந்ததே

சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் இதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ’நீயா நானா’ கோபிநாத் ஒரு போட்டியாளராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்ட தகவலின்படி கோபிநாத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோபிநாத்தின் நண்பர் ஒருவர் கூறுகையில், ‘கோபிநாத் குடும்பத்தை விட்டு இரண்டு நாள் கூட இருக்க மாட்டார் என்றும் எனவே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் கோபிநாத்துக்கு என்று ஒரு தனி மரியாதை இருக்கிறது என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்று அந்த மரியாதையை கெடுத்து கொள்ளவும் அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது

From around the web