இந்தியாவில் சோகத்திலும்  நல்ல முன்னேற்றம்!மக்கள் ஓரளவு திருப்தி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 302 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியது!
 
இந்தியாவில் சோகத்திலும் நல்ல முன்னேற்றம்!மக்கள் ஓரளவு திருப்தி!

மக்கள் மத்தியில் தற்போது வாய்மொழியாக மாறியுள்ளது கண்ணுக்கு தெரியாமல் உயிரை வாங்கும் கொரோனா மனிதனின் கண்ணுக்கே தெரியாமல் மனித உடம்பிற்குள் புகுந்து அதனால் அவரது உடல்கள் மிகவும் வேதனை உள்ளாகி அதன் பின்னர் மரணமடைகின்றனர். இதனால் பல்வேறு மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். கொரோனா நோயானது உலகம் பரவியதாக மிகவும் வேதனை அளிப்பது மறுக்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. அத்தகைய கொடுமையான இந்த கொரோனா நோயானது முதன்முதலில் மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக காணப்படும் சீன நாட்டில் கண்டறியப்பட்டது.

covid 19

அதன்பின்னர் உலகமெங்கும் பரவி யதாகவும் கூறப்பட்டது. மேலும் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியாவிலும் பரவத் தொடங்கி கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோயானது கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில் தற்போது கொரோனா வீரியமானது மீண்டும் இந்தியாவில் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் நாளுக்கு நாள் இந்நோயினால் உயிரிழப்புகள் அதிகரித்து மக்களை கஷ்டத்திற்கு உள்ளாகிறது. இதன் மத்தியில் சோகத்திலும் ஒரு சந்தோசமான செய்தி போல நாளுக்கு நாள் கொரோனா நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்ப வீதமானது தொடர்ந்து  அதிகரித்து வருவது மக்களுக்கு ஓரளவு திருப்தியை அளிக்கிறது.

அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 302 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் இந்தியாவில் இதுவரை 1 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரத்து 866 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நோயின் பாதிப்பு அதிகமாக இருப்பினும் நோய் குணமடைய வீதமானது தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

From around the web