இன்னும் நான்கு நாட்களில் நல்ல செய்தி வரும்: எஸ்பிபி சரண் வீடியோ 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஎம் மருத்துவமனையில் தினமும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது அதே போல் எஸ்பிபி சரண் அவர்களும் தனது தந்தையின் உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு வருகிறார் 

இந்த நிலையில் சற்று முன்பு எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் ’எஸ்பிபி அவர்களின் உடல்நிலை நான்கு நாட்களாக சீராக இருப்பதாகவும் இன்னும் நான்கு நாட்களில் நல்ல செய்தி ஒன்று வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் எஸ்பிபியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்

இந்த நிலையில் எம்ஜிஎம் மருத்துவமனை சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’எஸ்பிபி அவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார் என்றும் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியின் உதவியால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அவர் முழு சுயஉணர்வுடன் இருப்பதாகவும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் அனைத்தும் அவரது உடல்நிலை ஏற்றுக்கொள்வதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது

From around the web