மதுரை மக்களே உங்களுக்கு ஏற்ற செய்தி; "நீங்கள் கவலைப்பட வேண்டாம்"

மதுரை மாநகரில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவந்தது என்று அமைச்சர் பழனி செல்வம் தியாகராஜன் கூறியுள்ளார்!
 
madurai

தற்போது நம் தமிழகத்தில் ஆட்கொல்லி நோயான கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தற்போது கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. அதுவும் நம் தமிழக முதல்வராக உள்ள மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடப்பு வாரத்தில் மிகப்பெரிய கடுமையான ஊரடங்கு அமல் படுத்தி இருந்தார். மேலும் அடுத்த வார காலத்திற்கும் ஊரடங்கு தொடரும் என்றும் அவர் நேற்றையதினம் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.palanivel

அதுவும் குறிப்பாக கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு பகுதிகளில் இந்த நோயின் பாதிப்பானது கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். இதனால் நாளைய தினம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அந்த மாவட்டங்களில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தமிழகத்தில் நிலவினாலும் தமிழகத்தில் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரில் மிகப்பெரிய மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை தமிழகத்தில் அமைச்சராக உள்ள பழனி வேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

அதன்படி மதுரை மாநகரில் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துவிட்டது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மேலும் இவர் தமிழக நிதியமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இதனை சென்னையில் இது பற்றி பேட்டி அளித்தார். அதன்படி தற்போது மதுரை மாநகரத்திற்கு உள்ளே உள்ள பகுதிகளில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப் பட்டது என்றும் அவை கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்றும் அவர் கூறினார் .ஆனால் மதுரையின் புறநகர்ல் கொரோனா சற்று அதிகமாக உள்ளது என்றும் அவர் இன்னும் சில நாட்களில் கொரோனா கட்டுப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

From around the web