குட் நியூஸ்: முன்னேற்பாடுகள் தயார் ;11 ஆயிரத்து 194 படுக்கைகள் காலியாக உள்ளது!

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக 11194 படுக்கைகள் தற்போது வரை காலியாக உள்ளதாக கூறப்படுகிறது!
 
குட் நியூஸ்: முன்னேற்பாடுகள் தயார் ;11 ஆயிரத்து 194 படுக்கைகள் காலியாக உள்ளது!

தமிழ்நாட்டின் தலைநகரமாக உள்ளது சென்னை மாநகரம். இந்த சென்னை மாநகரம் ஆனது தமிழகத்தின் தாயகம் என்று அழைக்கப்படலாம். மேலும் இந்த சென்னையில் சென்றால் பிழைத்துவிடலாம் என்ற எண்ணம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. மேலும் சென்னை வந்தாரை வாழவைக்கும் பூமியாகவும் உள்ளது. இந்நிலையில் இத்தகைய சிறப்பு பெற்ற சென்னையில் கடந்த சில நாட்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் தலைவிரித்து ஆடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.corona

மேலும் தினந்தோறும் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனாநோயாளிகள் கண்டறிவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. குறிப்பாக ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளில் உள்ளவர்களுக்கு நோய் தொற்று கண்டறிய வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் இதற்கு எதிராக சென்னை மாநகர அரசு பல்வேறு விதிகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.ஆயினும் இந்நோயானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் தேனாம்பேட்டை அண்ணாநகர் மண்டலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது

  தற்போது சென்னையில் சுகாதாரத்துறை சார்பில் சிலை இன்பமான தகவல் வெளியாகியுள்ளது அதன்படி சென்னையில் தற்போது நோயாளிகள் சிகிச்சை பெற 11194 படுகைகள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசு மற்றும் தனியார் சிகிச்சை மையங்களில் மொத்தம் 11194 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் கூறப்படுகிறது. மேலும் மொத்தம் 17 ஆயிரத்து 763 படுக்கைகள் உள்ளது என்றும் கூறியுள்ளது அதில் 6 ஆயிரத்து 569  படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட படுகைகள் காலியாக உள்ளது சென்னையில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வண்ணமாக காணப்படுகிறது.

From around the web