சமூக சேவைக்கும் தனது வாழ்நாளை செலவிட்ட நல்ல மனிதர் ! இரங்கல் தெரிவித்த தமிழக ஆளுநர்!

நடிகர் விவேக்கின்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!
 
சமூக சேவைக்கும் தனது வாழ்நாளை செலவிட்ட நல்ல மனிதர் ! இரங்கல் தெரிவித்த தமிழக ஆளுநர்!

மக்களுக்கு தனது காமெடி பெறுவதோடு மட்டுமல்லாமல் சமூக கருத்துக்களையும் கொண்டு செல்ல வேண்டும் என்று அயராது பாடுபட்டவர் நடிகர் விவேக். சிறியவர் முதல் பெரியவர் வரை உள்ள அனைத்து தர மக்களிடமும் இன்றியமையாத இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பல்வேறு புதுமுக இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழகத்தில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vivek

இத்தகைய பண்புகள் கொண்ட நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழக திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் நேற்றைய தினம் மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவர் உடலானது தற்போது தகனம் செய்யப்பட்டது. மேலும் இவருக்கு ரசிகர்கள் நடிகர்கள் இயக்குனர்கள் என அத்தனை பேரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்

 தற்போது தமிழக ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் நடிகர் விவேக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சமூக சேவைக்கும் தனது வாழ்நாளை செலவிட்ட நல்ல மனிதர் விவேக் என்றும் ஆளுநர் கூறினார் மேலும் விவேக்கின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமின்றி திரையுலகத்திற்கு பேரிழப்பு என்றும் ஆளுநர் பன்வாரிலால் கூறியுள்ளார்.

From around the web