நல்ல வேல புதுச்சேரியில் லாக்டவுன் இல்ல!மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்!

புதுச்சேரியில் முழு ஊரடங்கு வாய்ப்பே இல்லை என்று கூறும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!
 
நல்ல வேல புதுச்சேரியில் லாக்டவுன் இல்ல!மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்!

சட்டமன்ற தேர்தல் ஆனது தமிழகத்தில் நடைபெற்றது. தமிழகத்தோடு அண்டை மாநிலமான புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் சில தினங்களாக புதுச்சேரியில் ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனால் புதுச்சேரி அரசு சார்பில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சில தகவல்களை கூறியிருந்தார்.

lockdown

அதன்படி புதுச்சேரியில் முக கவசம் இல்லாமல் வெளியே அவர்களிடம் அபராதத்துடன் முகக்கவசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் அவர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். மேலும் மக்கள் ஒத்துழைப்பு தந்தால் கொரோனா  கட்டுப்பாட்டுக்குள் வரும் என்றும் அவர் சில தினங்களுக்கு முன்பாக கூறியிருந்தார். மேலும் அவர்  ரெம்டெசிவர் மருந்தினை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் கூறியுள்ளார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதற்கு முன்னதாக அவர் புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அங்கே சென்று தடுப்பூசி போடப்படும் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் வாகனத்தை கொடியசைத்து நடத்தி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி புதுச்சேரியில் முழு ஊரடங்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார். மேலும் அவர் மக்களின் ஒத்துழைப்பைப் ஒரு பகுதி நேர ஊரடங்கு பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு போடப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web