தங்கம் விலை உயர்வுக்கு கொரோனா காரணமா? திடுக்கிடும் தகவல்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து. தற்போது தங்கம் சவரன் ஒன்றுக்கு 32 ஆயிரத்து 576 என்று விற்பனையாகி வருகிறது தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருவதால் தங்கம் வாங்குபவர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் ரூபாய் 750 உயர்ந்துள்ளது என்பதும் இந்த வாரத்தில் மட்டும் ரூபாய் 1360 உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது கொரோனா வைரசின் தாக்கத்தால் சீனா மற்றும்
 
தங்கம் விலை உயர்வுக்கு கொரோனா காரணமா? திடுக்கிடும் தகவல்

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்து. தற்போது தங்கம் சவரன் ஒன்றுக்கு 32 ஆயிரத்து 576 என்று விற்பனையாகி வருகிறது

தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருவதால் தங்கம் வாங்குபவர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் ரூபாய் 750 உயர்ந்துள்ளது என்பதும் இந்த வாரத்தில் மட்டும் ரூபாய் 1360 உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடதக்கது

கொரோனா வைரசின் தாக்கத்தால் சீனா மற்றும் அண்டை நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடியும் நிலையில் சீனாவில் அலுவலகங்கள் கடைவீதிகள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது

இதன் காரணமாகத்தான் உலக அளவில் தங்கத்தின் விலை கிடுகிடு என உயர்ந்து வருவதாகவும் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வரை இன்னும் இன்னும் தங்கத்தின் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதால் தங்கத்தின் மீது முதலீடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தான் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web