தங்கம் விலை எகிறப்போகுது! கடுப்பான பெண்கள்

2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தங்கம் இறக்குமதிக்கான வரியை 2.5% உயர்த்துவதாக அறிவிப்பு வெளியானது. தற்போது 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் உள்ளிட்ட நகைகள் வாங்க பான் எண் கட்டாயமாக உள்ளது. இந்த வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் தங்க நகை வியாபாரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால், பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு போதும் என்பதால் 2
 

2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தங்கம் இறக்குமதிக்கான வரியை 2.5% உயர்த்துவதாக அறிவிப்பு வெளியானது.

தற்போது 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் உள்ளிட்ட நகைகள் வாங்க பான் எண் கட்டாயமாக உள்ளது. இந்த வரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் தங்க நகை வியாபாரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. 

ஆனால், பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு போதும் என்பதால் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் உள்ளிட்ட நகைகள் வாங்க பான் எண் தேவையில்லை. ஆதார் எண்ணே போதும் என்ற வசதி ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை எகிறப்போகுது! கடுப்பான பெண்கள்

இறக்குமதி வரி 12.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் விலை உயர்வு காரணமாக, விற்பனையும் பாதிக்கப்படக்கூடும். 

இதன் மூலம் தற்போது 10 சதவீதமாக இருக்கும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

பான் எண் கேட்கப்படும் இடங்களில் பான் கார்டு இல்லாதவர்கள் தங்கள் ஆதார் கார்டு எண்ணை அளிக்கலாம் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நகை விலை இனி கிடுகிடுவென் ஏறும் என்று மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இது சற்று அதிர்ச்சிகரமான திட்டம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

From around the web