35 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில் அந்த விமானத்திலும் பயணிகள் தங்கம், சிலைகள் உள்பட பல்வேறு மதிப்பு மிகுந்த பொருட்களை கடத்தலில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே கேரளாவுக்கு வரும் விமானங்களில் இருந்து தங்கம் அதிகமாக கடத்தப்படுவதும் அதை சுங்கத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு வருவதுமான செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் 35 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கடத்த
 

35 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயங்கி வரும் நிலையில் அந்த விமானத்திலும் பயணிகள் தங்கம், சிலைகள் உள்பட பல்வேறு மதிப்பு மிகுந்த பொருட்களை கடத்தலில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே கேரளாவுக்கு வரும் விமானங்களில் இருந்து தங்கம் அதிகமாக கடத்தப்படுவதும் அதை சுங்கத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு வருவதுமான செய்திகளை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் 35 கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கடத்த திட்டமிட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பழங்கால சிலைகள் ஆக காணப்படும் இந்த சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு, சிலை கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

மொத்தம் நான்கு சிலைகள் கொண்ட இவற்றின் மொத்த மதிப்பு 35 கோடி ரூபாய் இருக்கும் என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கொல்கத்தா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web