தேர்ந்தெடுத்த கையோட நினைவிடத்திற்கு சென்று மரியாதை!"ஸ்டாலின்"

திமுக சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு க ஸ்டாலின் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை!
 
stalin

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மேலும் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி  எண்ணபட்டது. இந்த வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலிருந்தே திமுக  முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக கட்சியானது அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மேலும் திமுகமானது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.kalaignar

மேலும் திமுக சார்பில் திமுக கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டு இருந்தார். கொளத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களை விட அவர் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

மேலும் இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தின் முடிவில் அனைவரும் ஒருமனதாக எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்தனர் செய்தியானது ஊடகத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் தற்போது சட்டமன்ற கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் நேரில் சென்று மரியாதை செலுத்தி வருகிறார். மேலும் அவரது நினைவிடத்தை சுற்றியும் சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார். மேலும் இவருடன் துரைமுருகனும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web