தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதில் மகிழ்ச்சி: இலங்கை அமைச்சரின் திமிர்ப்பேச்சு!

 

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி என்று இலங்கை அமைச்சர் ஒருவர் திமிர் பேச்சு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வந்தனர். ஆனால் பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நின்றது

இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இலங்கை மீனவர்கள் கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்கி அதுமட்டுமில்லாமல் மீன் வலைகளையும் சேதப்படுத்தினர் இதனால் பெரும் சோகத்துடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினார்கள்

இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கருத்து கூறிய இலங்கை கடல் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை இந்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு கட்டுப்படுத்தவில்லை என்றால் இலங்கை இந்திய மீனவர்கள் இடையே கண்டிப்பாக மோதல் உருவாகும் என்றும் அவர் கூறினார்

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சி என்று கூறியிருப்பதற்கு தமிழக அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

From around the web