ஜிகே வாசன் மத்திய அமைச்சராவதாக தகவல்: தமாக கலைக்கப்படுகிறதா?

ஜி கே வாசன் மத்திய அமைச்சராக இருப்பதாகவும் அவருடைய தாமாகா பாஜகவுடன் இணைக்கப்பட இருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளிலும் நன் மதிப்பை பெற்றவர் ஜி கே வாசன். எந்த ஒரு எதிர்ப்பு அரசியலும் செய்யாமல் பாசிட்டிவ் அரசியல் செய்து வரும் ஜிகே வாசன் மீது பிரதமர் மோடியிடம் நல்ல மரியாதை உள்ளது. சமீபத்தில் பிரதமரை அவர் சந்தித்த போது தமிழக
 

ஜி கே வாசன் மத்திய அமைச்சராக இருப்பதாகவும் அவருடைய தாமாகா பாஜகவுடன் இணைக்கப்பட இருப்பதாகவும் வெளியாகியிருக்கும் செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளிலும் நன் மதிப்பை பெற்றவர் ஜி கே வாசன். எந்த ஒரு எதிர்ப்பு அரசியலும் செய்யாமல் பாசிட்டிவ் அரசியல் செய்து வரும் ஜிகே வாசன் மீது பிரதமர் மோடியிடம் நல்ல மரியாதை உள்ளது.

சமீபத்தில் பிரதமரை அவர் சந்தித்த போது தமிழக வளர்ச்சி குறித்த கோரிக்கை மட்டுமே அவர் வைத்ததாகவும் தனக்கென எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை என்பதால் பிரதமரின் குட்புக்கில் வாசன் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக ஜி கே வாசன் நியமனம் செய்யப்படலாம் என்ற ஒரு கருத்து நிலவியது. ஆனால் அது நடக்காமல் போனது. இருப்பினும் விரைவில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

மத்திய அமைச்ச பதவி கொடுத்தால் த.மா.கவை பாஜக உடன் இணைக்க ஜி கே வாசன் சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமாகா நிர்வாகிகள் இந்த செய்தியை மறுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர் பதவிக்காக ஜி கே வாசன் கட்சியை அடகு வைக்க மாட்டார் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மத்திய அமைச்சர் பதவியை வாசனுக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

From around the web