பெண்கள் விளையாட தடை: தாலிபான்கள் புதிய கட்டுப்பாடு!

 
afghanistan

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவதாக தாலிபான்களின் அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்த தாலிபான்கள் தற்போது புதிய அரசை ஏற்படுத்தியுள்ளனர். அங்கு புதிய பிரதமர் உள்பட பலர் பொறுப்பில் பொறுப்பை ஏற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தாலிபான்கள் பொறுப்பு ஏற்றதில் இருந்து பெண்கள் பத்திரிக்கை துறையில் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்டது. அது மட்டுமின்றி பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ஆப்கானிஸ்தான் நாட்டில் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் பங்கேற்க தடை விதித்துள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இதனால் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

பெண்கள் விளையாட்டு போட்டிகளில் விளையாடினால் அவர்களுடைய உடல் பாகங்கள் வெளியே தெரியும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனை அடுத்து கிரிக்கெட் உள்பட எந்த விளையாட்ட்லும் பெண்கள் இனிமேல் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விளையாட்டு என்பது பெண்களுக்கு முக்கியமானது அல்ல என்றும் தாலிபான்கள் கூறியுள்ளனர்

From around the web