தினமும் மலை உச்சிக்கு சென்று படிக்கும் மாணவி! ஏன் தெரியுமா?

பிளஸ் டூ தேர்வில் 98% மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஒருவர் நீட் தேர்வுக்கு தயாராவதற்கு தினமும் காலை மலை உச்சிக்கு சென்று வரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது பிளஸ் டூவில் 98 சதவீதம் மார்க் எடுத்த மாணவி சுனிதா என்பவர் தனது வீட்டில் தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஆனால் தனது வீட்டில் மொபைல் ஃபோன் டவர் சரியாக கிடைக்கவில்லை என்பது குறித்து தனது சகோதரரிடம் கூறியுள்ளார் தங்கைக்காக அந்த சகோதரர் தனது வீட்டின்
 

தினமும் மலை உச்சிக்கு சென்று படிக்கும் மாணவி! ஏன் தெரியுமா?

பிளஸ் டூ தேர்வில் 98% மதிப்பெண்கள் எடுத்த மாணவி ஒருவர் நீட் தேர்வுக்கு தயாராவதற்கு தினமும் காலை மலை உச்சிக்கு சென்று வரும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

பிளஸ் டூவில் 98 சதவீதம் மார்க் எடுத்த மாணவி சுனிதா என்பவர் தனது வீட்டில் தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஆனால் தனது வீட்டில் மொபைல் ஃபோன் டவர் சரியாக கிடைக்கவில்லை என்பது குறித்து தனது சகோதரரிடம் கூறியுள்ளார்

தங்கைக்காக அந்த சகோதரர் தனது வீட்டின் அருகிலுள்ள மலை உச்சியில் ஒரு சின்ன குடிசை போட்டுக் கொடுத்துள்ளார். அந்த குடிசையில் மிக அருமையாக மொபைல் டவர் கிடைப்பதால் அங்கு காலை முதல் மாலை வரை சுனிதா உட்கார்ந்து நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்

மழை பெய்து குடிசைக்கு முன் தண்ணீராக இருக்கும் நிலையிலும் அவர் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது அந்த புகைப்படத்தில் இருந்து தெரிய வருகிறது. இந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பு படித்து மிகப்பெரிய டாக்டராக வேண்டும் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

From around the web