காலையிலே 6 மணிக்கு தயாராக இருங்கள்; மதியத்திற்கு மேலே கிடையாது!!!

நாளை காலை 6 மணி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படுவதாக தகவல்!
 
vegetable

தற்போது நம் தமிழகத்தில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்து. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல் படுத்தினார். அவை நாளையுடன் நிறைவு பெற உள்ள நிலையில் நேற்றைய தினம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் திடீர் என்று திருப்புமுனையான இந்த முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட தான் என அவர் கூறினார் இதனால் தமிழக மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருந்தனர்.lockdown

மேலும் இன்றைய தினம் மட்டும் தமிழகத்தில் எவ்வித தடையுமின்றி ஊரடங்கு கிடையாது என்றும் அனைத்து கடைகளும் திறக்கலாம் என்றும் கூறினார். இந்நிலையில் நாளை முதல் இந்த ஊரடங்கு ஆனது மிகவும் கடுமையானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .மேலும் காய்கறிகள் சந்தைகள் போன்றவைகள் ஒரு வார காலத்திற்கு இயங்காது என்றும் கூறப்படுகிறது. நாளை காலை முதல் அனைத்து வீடுகளுக்கு முன்பாக வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

அதன்படி தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகனங்களில் மக்களுக்கு காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முழு ஊரடங்கு கடைகள் மூடல் காரணமாக4380 வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1610 வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகவும் தினமும் 1160 டன் காய்கறிகள் பழங்களை விற்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2770 வாகனங்கள் மூலம் 2228 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள் பழங்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

From around the web