ஈஸ்டர் தின வாழ்த்து கூறும் அமமுக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி!

கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துக் கூறும் அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகள் கூட்டணி வைத்தது. இதில் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. தமிழகத்தில் தேமுதிக கட்சியானது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் அமமுக கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றன. தேமுதிகவிற்கு அமமுக சார்பில் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.  அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

ttv

அதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் அவர் இன்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் நாளை தினம் உலகம் முழுவதும் ஈஸ்டர் தினமானது கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தற்போது டிடிவி தினகரன் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

கல்வாரி சிலுவை சுமந்த இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததிருநாள் ஈஸ்டர் எனவும் அவர் கூறினார். நமக்கு புது நம்பிக்கையோடும், புதிய மகிழ்ச்சியோடும் கூடிய புது வாழ்வை தந்திடும் நன்னாளாக அமையட்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதுவரை நம்மை சூழ்ந்திருந்த துன்பங்கள் அனைத்தும் விலகட்டும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும்அருள் நாதரின் போதனைகளை என்றும் நம் இதயத்தின் முன் நிறுத்தி அவற்றை கடைபிடிப்போம் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஈஸ்டர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்..

From around the web