கோயம்பேட்டில் மாலை போட்ட மதிமுக பொது செயலாளர் வைகோ !

கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்தார்!
 
கோயம்பேட்டில் மாலை போட்ட மதிமுக பொது செயலாளர் வைகோ !

சட்டமன்ற தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அனைவரும் காலையிலேயே சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு இருந்தார். அவர் தேர்தல் சமயத்தில் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தார். அதன்படி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களித்த தாகமும் அவர் கூறியுள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் கூட்டணி வைத்து சந்தித்துள்ளன.

ambedkar

மேலும் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை வைத்து சட்டமன்ற தேர்தலில் சந்தித்துள்ளன. மேலும் இவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மதிமுக கூட்டணியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுகவில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் கொளத்தூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

திமுக சார்பில் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக மதுரை தெற்கு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதிமுகவின் பொதுச் செயலாளராக வைகோ உள்ளார் இன்றைய தினம் இந்தியா முழுவதும் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அவர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார். அதன்படி சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்று அங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுபோன்று பல தலைவர்களும் அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web