நடப்பு கல்வியாண்டிலும் பொதுத்தேர்வு ரத்து! தமிழகத்திலும் நடக்குமா?

 

கொரோன வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டது தெரிந்ததே

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டுக்காக பள்ளிகளிலும் இன்னும் திறக்கப்படாமல் உள்ள நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்வுகளை எப்படி நடத்துவது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது

exam

இந்த நிலையில் பிள்ளையார் சுழியாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் நடப்பு கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்

மம்தா பானர்ஜி அடுத்து தமிழகம் உள்பட மேலும் சில மாநில முதல்வர்கள் வரும் கல்வி ஆண்டிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய செய்யும் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நடப்பு கல்வியாண்டில் பொது தேர்வு நடப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது

From around the web