திமுக தெரிந்த எதிரி, அதிமுக மறைமுக எதிரி: பிரபல நடிகை ஆவேசம்

திமுக அனைவருக்கும் தெரிந்த எதிரி என்றும் அதிமுக மறைமுகமான எதிரி என்றும் நடிகையும் நடன இயக்குனருமான காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தமிழக அரசு தடை விதித்தது குறித்து பாஜகவினர் பலரும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே இந்த விமர்சனம் ஒரு கட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக மோதலாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்
 

திமுக தெரிந்த எதிரி, அதிமுக மறைமுக எதிரி: பிரபல நடிகை ஆவேசம்

திமுக அனைவருக்கும் தெரிந்த எதிரி என்றும் அதிமுக மறைமுகமான எதிரி என்றும் நடிகையும் நடன இயக்குனருமான காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார்

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தமிழக அரசு தடை விதித்தது குறித்து பாஜகவினர் பலரும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த விமர்சனம் ஒரு கட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக மோதலாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள இந்து மக்களுக்கு திமுக என்பது நேரடியான எதிரி என்றால் அதிமுக என்பது மறைமுகமான எதிரி. திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மறைமுகமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. எனவே மக்கள் விழிப்புணர்ச்சி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். காயத்ரி ரகுராம் பதிவு செய்துள்ள இந்த டுவீட் இந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web