ஊரடங்குல தெரு விலங்குகளுக்கு உணவளிக்க நிதி! அதுவும் "9.20 லட்சம்"!!

ஊரடங்கு காலத்தில் தெரு நாய்கள் குதிரைகள் யானைகளுக்கு உணவு அளிக்க 9.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக கால்நடைத்துறை விளக்கம் அளித்துள்ளது!
 
dogs

தற்போது நம் தமிழகத்தில் மூன்று வாரமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. முதலில் இரண்டு வாரமாக முழு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்தன. இந்நிலையில் நடப்பு வாரத்தில் எத்தகையதளர்வுகளுக்கும் இடம் கொடாமல் ஊரடங்கு மிகவும் கடுமையாக உள்ளது.  தமிழக அரசின் சார்பில் காய்கறிகள் வீட்டுக்கே வந்து விநியோகிக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் நோயின் தாக்கமும் குறைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் தெரு நாய்கள் போன்றவைகள் உணவின்றி தவிக்கின்றன.highcourt

இந்நிலையில் அவர்களுக்கு உணவளிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று சில தினங்களாக கூறப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் உணவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு உணவு அளிக்க நிதி ஒதுக்குமாறு ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை விலங்குகள் நல ஆர்வலர் சிவா தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு கொடுத்துள்ளது. இதனால் தெரு நாய்கள் குதிரைகள் யானைகளுக்கு உணவளிக்க 9.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக கால்நடை துறை சார்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

மேலும் விலங்குகளுக்கு ஒதுக்கப்படும் நிதி  தெரு விலங்குகள்  செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி எச்சரிக்கை விட்டுள்ளார்.இதன் மூலம் தமிழகத்தில் மனிதநேயம் அவ்வப்போது தலை நிமிர படுவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

From around the web