பெங்களூரில் இருந்த கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நகரங்களில் சென்னையைப் போல் பெங்களூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து பெங்களூரில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து பெங்களூரில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய தங்களுடைய சொந்த ஊருக்கும் சொந்த மாநிலத்திற்கு சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது இதனை அடுத்து அம்மாநில உள்துறை அமைச்சகம் பெங்களூரு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி பெங்களூரில்
 

பெங்களூரில் இருந்த கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நகரங்களில் சென்னையைப் போல் பெங்களூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து பெங்களூரில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அம்மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து பெங்களூரில் இருந்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய தங்களுடைய சொந்த ஊருக்கும் சொந்த மாநிலத்திற்கு சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இதனை அடுத்து அம்மாநில உள்துறை அமைச்சகம் பெங்களூரு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன்படி பெங்களூரில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாது என்றும் எனவே பொதுமக்கள் அச்சம் கொண்டு பெங்களூரை விட்டு செல்ல வேண்டாம் என்றும் தற்போது பொதுமக்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும் பெங்களூரிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் பெங்களூரிலிருந்து சாரை சாரையாக மக்கள் வெளியேறி வருகிறார்கள் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பெங்களூரு நகரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக இருக்கும் நகரம் என்பதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் வெளியேறினால் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web