கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு…

கொரோனா பாதிப்பில் தமிழகத்தினைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்தான் அதிக பாதிப்புகளைக் கொண்ட மாவட்டங்களாக இருந்து வருகின்றன. இதனால் 5 கட்ட ஊரடங்கில் தளர்வுகள் பல அறிவிக்கப்பட்ட போதும் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து பேருந்துகள் இயக்கம், ஹோட்டல்களில் அமர்ந்து உண்ணுதல் என்பது போன்ற தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவது மக்கள் மத்தியில் பீதியைக்
 
கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு…

கொரோனா பாதிப்பில் தமிழகத்தினைப் பொறுத்தவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்தான் அதிக பாதிப்புகளைக் கொண்ட மாவட்டங்களாக இருந்து வருகின்றன.

இதனால்  5 கட்ட ஊரடங்கில் தளர்வுகள் பல அறிவிக்கப்பட்ட போதும் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து பேருந்துகள் இயக்கம், ஹோட்டல்களில் அமர்ந்து உண்ணுதல் என்பது போன்ற தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில், தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவது மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் சென்னை கொண்டுவரப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு…

இந்தநிலையில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால், தமிழகம் மிக எளிதில் கொரோனாவில் இருந்து மீண்டு விடும் என்பதால், சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஊடகங்களில் இதுகுறித்த தகவல் வெளியாகவில்லை என்றாலும், சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருபுறம் மீண்டும் முழு ஊரடங்கா? என்பதுபோல் எதிர்ப்புகள் கிளம்பினாலும், இதன்மூலம் கொரோனா எப்படியும் கட்டுக்குள் வந்துவிடும்போல் தெரிகிறது.

From around the web