நாளை முதல் 2 வாரங்கள் முழு ஊரடங்கு: அதிர்ச்சியில் தமிழக மக்கள்

 
நாளை முதல் 2 வாரங்கள் முழு ஊரடங்கு: அதிர்ச்சியில் தமிழக மக்கள்

நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு என தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலம் அறிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

நாளை இரவு 9 மணி முதல் இரண்டு வாரங்களுக்கு கர்நாடக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு என்றும் அந்த சமயத்தில் எந்தவிதமான கடைகள் திறக்கவும், போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கடைகள் திறக்கப்படும் என்றும் அதன் பிறகு கடைகள் மூடப்படும் என்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 

lockdown

ஊரடங்கின்போது வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்தே இந்த அதிரடி உத்தரவை கர்நாடக முதல்வர் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலத்தை போலவே தமிழகத்திலும் விரைவில் முழு ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

கர்நாடக மாநிலத்தின் இந்த உத்தரவால் பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல நகரங்களுக்கு சென்று வரும் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்,

From around the web